இராணுவ பேச்சு வார்த்தை யோசனை ஒன்றை முன்வைத்துள்ள தென்கொரியா!!

advertisement

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இராணுவ பேச்சு வார்த்தை ஒன்றுக்கான யோசனை ஒன்றை தென்கொரியா முன்வைத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறான உயர் மட்ட பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெறுவது இதுவே முதல் முறை.

வடகொரியாவினால் கடந்த வாரம் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டு பதற்றமான சூழ்நிலை காணப்படும் தருணத்திலே இந்த பேச்சு வார்த்தைக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவ பேச்சு வார்த்தையின் போது இருநாடுகளுக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய பல விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

advertisement