லொறி மீது மோதிய விமானம்

advertisement

ரஷ்யாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த லொறி மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதன் விமானி படுகாயமடைந்துள்ளார்.

ரஷ்யாவில் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட தயாரான நிலையில் மேலே எழுந்துள்ளது. ஆனால் இந்த முயற்சியில் தடுமாறிய விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், சாலையில் எதிர்பட்ட லொறி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் விமானம் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

விமானம் லொறி மீது மோதும் காட்சிகளை அந்தப் பகுதியில் இருந்த நபர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த விபத்துக் குறித்து பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

advertisement