கத்தார் நாட்டுக்கு செல்ல 80 நாட்டவர்கள் விசா எடுக்க தேவையில்லை!!

advertisement

கத்தார் நாட்டுக்கு செல்ல இந்தியர்கள் உள்ளிட்ட 80 நாட்டவர்கள் விசா எடுக்க தேவையில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் முகமது ரஷீத் அல் மஜ்ரோஹி அறிவித்துள்ளார்.

கத்தார் நாட்டிற்கு அண்டைநாடுகளுடனான உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் வான்வழி போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு, விசா நடைமுறையை குறிப்பிட்ட நாடுகளுக்கு கத்தார் தளர்த்தியுள்ளது.

2.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கத்தார் நாட்டில், 90 சதவீத மக்கள் வெளிநாட்டவர்களே ஆவர். இங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் பெரும்பாலும் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

advertisement