தாயை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த மகன்!

advertisement

அமெரிக்காவில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் Fullerton நகரை சேர்ந்தவர் Ah Le Fang (33) இவர் தனது 50 வயதான தாய் மற்றும் தாயின் 75 வயதான ஆண் நண்பர் ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று அதே பகுதியில் வசிக்கும் Fang-ன் சகோதரி அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதையடுத்து தனது அறைக்கு கோபமாக சென்ற Fang உள்பக்கமாக கதவை பூட்டி கொண்டார்.

Fang-ன் தாய் கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்காத அவர், பின்னர் திடீரென அறையிலிருந்து கத்தியுடன் வெளியில் வந்துள்ளார்.

அப்போது ஆத்திரத்தில் தனது தாயையும், அவரின் ஆண் நண்பரையும் கத்தியால் Fang குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார், சகோதரி வேறு அறையில் இருந்ததால் கத்தி குத்திலிருந்து தப்பினார்.

இதையடுத்து வலியால் துடித்த Fang-ன் தாய் அவசர உதவிக்கு எண்ணுக்கு போன் செய்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் Fang-ன் தாய் உயிரிழக்க, அவரின் நண்பர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த Fang-ஐ பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

advertisement