கொரியாவின் வான்பரப்பில் இரண்டு குண்டுத் தாக்குதல் விமானங்கள்

Report
57Shares

அமெரிக்காவின் இரண்டு குண்டுத் தாக்குதல் விமானங்கள் கொரியாவின் வான்பரப்பில் பறந்துள்ளன.

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணை இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், குறித்த விமானங்கள் இரண்டும் இவ்வாறு கொரியா வான்பரப்பில் பறந்துள்ளன.

அமெரிக்கா தங்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனத்தை செய்திருப்பதாகவும், எனவே தங்களது வான்பரப்பில் பறக்காவிட்டாலும், அமெரிக்க விமானங்களை சுட்டுவீழ்த்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாகவும் வடகொரியா அறிவித்திருந்தது.

இவ்வாறான பதற்ற நிலைக்கு மத்தியிலும் அமெரிக்க விமானங்கள் கொரிய வான்பரப்பில் பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2746 total views