கட்டலோனியாவின் தீர்மானத்தை உறுதிப்படுத்த வேண்டும் என ஸ்பெய்ன் பிரதமர் வலியுறுத்தல்

Report
21Shares

தன்னாட்சி பிராந்தியம் தொடர்பான அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கட்டலோனியா அறிவிக்க வேண்டும் என ஸ்பெய்ன் வலியுறுத்தியுள்ளது.

கட்டலோனிய பிராந்தியத் தலைவர் கார்லெஸ் பியுக்டெமொன்ட்ற்கு, ஸ்பெய்ன் பிரதமர் மெரியானா ரஜோய் இதனை வலியுறுத்தியுள்ளார்.

ஸபெய்ன், அரசாங்கம் ஏனைய நடவடிக்கைகளை எடுக்கும் முன்னர், இந்த அறிவிப்பு அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கட்டலோனியாவின் தன்னாட்சி பிராந்திய பிரகடனத்தில் கட்டலோனிய பிரதமர் கார்லெஸ் பியுக்டெமொன்ட் நேற்று கைச்சாத்திட்டார்.

எனினும் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு இடமளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே கட்டலோனியாவின் தீர்மானத்தை உறுதிப்படுத்த வேண்டும் என ஸ்பெய்ன் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

1501 total views