புகையத் தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை

Report
35Shares

ஜப்பானின் கியூஷூதீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை புகையத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலை நேற்று புகைய தொடங்கியுள்ளதாகவும் இதன் புகையும், சாம்பலும் வானில் சுமார் 300 மீட்டர் வரை பரவியதாக கூறப்படுகிறது. மேலும் வெடிப்பு ஏற்படும் பொழுது கட்டடங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

அண்மையில் 2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெடிப்பொன்றில் கற்கள் மற்றும் சாம்பலை வானில் விட்டெறிந்துள்ளது எனவும் இதன் தாக்கம் 8 கி.மீ (5 மைல்கள்) வரையிலும் இருந்தது.

இதன் காரணமாக அந்தப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2165 total views