மீன்களிடம் பேசும் ரோபோ: அதிசய கண்டுபிடிப்பு

Report
104Shares

மீன்களிடம் பேசும் ரோபோவை சுவிட்சர்லாந்தை சேர்ந்த எல்.எஸ்.ஆர்.ஓ. நிறுவன விஞ்ஞானிகள் கடந்த 5 ஆண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கியுள்ளனர். இந்த ‘ரோபோ’ மீன் வடிவத்திலேயே உள்ளது.

மீன்களை எளிதில் ஏமாற்றும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சூரிய ஒளி (சோலார்) மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன.மீன்களை போன்று நீந்தும் திறன் படைத்தவை. அதில் காணப்படும் டிரான்ஸ் மீட்டர் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும்

‘ரோபோ’ கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவல்களை மீன்களுக்கு புரியும்படி பேசும் திறன் படைத்தவை. மீன்களை ஒன்றாக சேர்க்கவும் முடியும். இது கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைக்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது.

கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அந்த நிறுவனம் மீன்களுக்கு நண்பனாக இருக்கும் வகையிலும், மனிதர்களுக்கு உதவும் வகையிலும் ஒரு ரோபோவை உருவாக்க முடிவு செய்து இதை கண்டு பிடித்தனர்.

இந்த ரோபோ இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

3470 total views