நேர்மறையான அதிர்ச்சி கொடுக்கவே இந்த முடிவை மேற்கொண்டேன்

Report
37Shares

தனது பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை முறையாக அறிவிப்பதற்காக எதிர்வரும் சிலநாட்களில் லெபனான் செல்லவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் சாத் அல்-ஹரிரி தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நேர்மறையான அதிர்ச்சி கொடுக்கவே இந்த முடிவை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாத் அல்-ஹரிரி கடந்த வாரம் தனது பதவி விலகலை அறிவித்ததன் பின்னர் முதல் முறையாகப் பொதுவெளியில் தோன்றி இதனைத் தெரிவித்துள்ளார். தான் மற்றும் தனது குடும்பத்தின் பாதுகாப்கு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தனது பதவி விலகலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் எனவும் குற்றம் சுமத்தியுள்ளர்.

சவூதி அரேபியாவில் வைத்து பிரதமர் ஹரீரி மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது எனவும் ஹரீரி தற்பொழுது சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் அந்நாட்டு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசரல்லா தெரிவித்திருந்தார்.

மேலும் ஹரீரி நாடு திரும்புவதற்கு சவூதி அதிகாரிகள் தடை ஏற்படுத்தி வருவதாகவும் ஹரீரியின் பதவி விலகலானது அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1906 total views