அணு­வா­யு­தப் போர் விரை­வில் வர­லாம்!

Report
263Shares

அணு­வா­யு­தப் போர் விரை­வில் வெடிக்­க­லாம் என்று வட­கொ­ரிய மற்­றும் தென்­கொ­ரிய ஊட­கங்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­தன.

பன்­னாட்­டுச் சட்­ட­திட்­டங்­களை மீறி தொடர்ந்து ஆயுத மற்­றும் அணு­வா­யு­தச் சோத­னை­களை நடத்­தி­வந்­தது வட­கொ­ரியா. அந்த நாடு கடந்த வார­மும் கண்­டம் விட்­டுக் கண்­டம் பாயும் ஏவு­க­ணை­யைச் சோதித்­தது. இந்த ஏவு­கணை வட­கொ­ரி­யா­வில் இருந்து புறப்­பட்­டுச் சென்று அமெ­ரிக்­கா­வின் எந்­தப் பாகத்­தை­யும் தாக்­கும் திறன் படைத்­தது.

இதற்­குப் பதி­ல­டி­யாக அமெ­ரிக்­கா­வும் பல்­வேறு நகர்­வு­களைக் கடைக்­கொண்டு வரு­கி­றது. உதா­ர­ண­மாக தென்­கொ­ரி­யா­வில் உள்ள அமெ­ரிக்­கச் சிப்­பாய்­க­ளின் குடும்­பத்­த­வரை நாடு திரும்­பு­மாறு அமெ­ரிக்கா கூறி­ யுள்­ளது.

இந்­தப் பின்­ன­ணி­யில் அணு­வா­யு­தப் போர் விரை­வில் சாத்­தி­யம் என்று வட­கொ­ரிய மற்­றும் தென்­கொ­ரிய ஊட­கங்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன.

9072 total views