நெருக்கடி நிலையை சமாளிக்க நட்பு நாடுகளிடம் ஆதரவு

Report
9Shares

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க நட்பு நாடுகளிடம் ஆதரவு கேட்க அதிபர் அப்துல் யாமீன் முடிவு செய்துள்ளார்.

சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிடம் ஆதரவை பெற திட்டமிட்டுள்ள அப்துல் யாமீன் 3 நாடுகளுக்கும் தனது தூதர்களை அனுப்பி தற்போதைய சூழ்நிலையை விலக்கி ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளதாக அதிபர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. பிரச்சனையை தீர்க்க இந்தியா உதவுமாறு முன்னாள் அதிபர் நசீத் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் இந்தியாவை கவலையடைய செய்துள்ளது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாலத்தீவு பிரச்சனையில் இந்தியா தலையிடக்கூடாது என சீன வெளியுறத்துறை எச்சரித்தது.

இந்தியா தலையிட்டால் பிரச்சனை தீவிரமடையும் என்றும் தெரிவித்திருந்தது. சீனாவின் ஆதரவு உள்ளதை உறுதிப்படுத்திக் கொண்ட அப்துல் யாமீன், இந்தியா தவிர மற்ற நாடுகளிடம் ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நீதிபதிகள் மற்றும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

409 total views