அரை முகத்தோடு பிறந்த பெண்ணின் முகம் சீரமைக்கப்பட்டது

Report
18Shares

அரை முகத்தோடு பிறந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக முழுமுகத்தை உருவாக்கி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Ivanka Danisová (30) எனும் பெண் நான்கு பெரும் அறுவைசிகிச்சைகளுக்கு பின்னர் வாழ்வில் முதல் முறையாக அவரது காது கேட்க தொடங்கி, வலது பக்க வாய் பகுதியை அசைத்தும், மென்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் சிறுவயதில் Goldenhar syndrome எனும் நோய்க்கு ஆட்பட்டார். இதனால் வலதுபுற முகத்தில் எலும்புகள் வளராமல் வாய் பகுதியை அசைப்பது கடினமாகிவிட்டது, இதனால் Ivanka Danisová உயிருக்கும் ஆபத்து என்று நம்பப்பட்டது.

ஆனால் அமெரிக்காவின் சிக்காகோவில் தொடர்ந்து 13 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவரது எலும்பு பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளது.

இதனால் Ivanka Danisová தொடர்ந்து காது கேட்கவும் மற்றும் தாடையை அசைக்கவும் முதன் முறையாக முடிந்துள்ளது.

Professor Russell Reid எனும் மருத்துவரின் தலைமையில் நடைபெற்ற அறுவைசிகிச்சையில் Ivanka வலது புற முக எலும்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

இதனால் தன்னை பார்த்து தன் குழந்தை பயப்படாமல் இருக்க என் முகத்தை மறைத்தேன், இனி அவ்வாறு செய்யவேண்டிய அவசியம் இல்லை என Ivanka மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

779 total views