பனியைத் தொடர்ந்து இல்-து-பிரான்சை அச்சுறுத்தும் வீதிச்சறுக்கல்!

Report
13Shares

நேற்றைய பனிப் பொழிவை அடுத்து verglas எனும் வீதிச்சறுக்கல் ஆபத்து இன்று இல்-துபிரான்சின் போக்குவரத்தை அச்சுறுத்துகின்றது.

அன்றாடம் இல்-து-பிரான்ஸ் ஊடாக வாகனத்தில் செல்லும் 12 மில்லியன் மக்கள் இன்று இந்தச் சிக்கல்களிற்கு முகம் கொடுக்க உள்ளனர்.

இன்று இல்-து-பிரான்சிற்குள் வெப்பநிலையானது -3°C இலிருந்து -11°C வரை செல்ல உள்ளது. இதனால் பனிபொழிந்த இடங்கள் இறுகி, பெரும் வழுக்கல் நிலையயை உருவாக்கி உள்ளன.

மிகவும் பனிபொழிந்த தேசிய வீதியான RN118 இல், திங்கள் செவ்வாய் இரவில் 2000 பேர் வாகனத்திற்குள் இரவிரவாகச் சிக்கியிருந்தமை வாசகர்கள் அறிவீர்கள். இந்த வீதி இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இதனால் இல்-து-பிரான்சிற்குள் வாகனங்களில் செல்வதைத் தவிர்க்குமாறு, போக்குவரத்துத் தகவல் மையமான Sytadin எச்சரித்துள்ளது.

561 total views