இந்தோனேஷியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து

Report
3Shares

இந்தோனேஷியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்தோனேஷியாவில் உள்ள ஜாவாவின் தெற்கு தங்கரங்க் பகுதியை சேர்ந்த சுமார் 40 பேர் மேற்கு பகுதிக்கு ஒரு தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றனர்.

சுபாங் மாகாணத்தின் மலைப்பகுதியில் பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக்கில் பேருந்து மோதியது.

இதில் நிலைதடுமாறிய பேருந்து, மலைப் பகுதியில் பலமுறை உருண்டு விழுந்தது. அதில் இருந்தவர்கள் அலறித் துடித்தனர். இதில் பேருந்தில் இருந்த 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

604 total views