வானில் வெடித்துச்சிதறியது விமானம் ; 71 பயணிகள் பலி

Report
87Shares

ரஷ்யவில் 71 பயணிகள் உடன் சென்ற விமாணம் விபத்துக்கு உள்ளானதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் டோமோடேடோவா விமான நிலையத்தில் இருந்து, அண்டோனோவ் அன் - 148 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானம் சரடோவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

பயணிகள் விமானம் ஆர்ஸ்க் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மாஸ்கோவை தாண்டிச் செல்லும் போது விமானம் ரேடாரின் தகவல்தொடர்பில் இருந்து மறைந்தது.

இதையடுத்து பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாஸ்கோவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள Argunovo எனும் கிராமத்தில் விழுந்து நொருங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத்தில் 65 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

அவசர கால மீட்பு படைகள் சாலை வசதி சரியாக இல்லாததால் இன்னும் விபத்து பகுதிக்கு செல்லவில்லை. ஆயினும் காவல்துறையினர் நடந்தே அந்த பகுதிக்கு சென்று கொண்டிருக்கின்றனர் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் வானிலை மற்றும் விமானிகளின் தவறு ஆகிய இரண்டும் விபத்து ஏற்பட காரணமாக இருந்து இருக்கலாம் என்றனர்.

3166 total views