அமெரிக்க வரலாற்றிலேயே மிக விரிவான உள்கட்டமைப்பு திட்டம்

Report
0Shares

ஒன்றை லட்சம் கோடி டாலர் மதிப்பிலான மிகப்பெரிய அமெரிக்க உள்கட்டமைப்பு திட்டத்தை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றிலேயே மிக விரிவான உள்கட்டமைப்பு மசோதா என அதனை டிரம்ப் வர்ணித்துள்ளார்.

சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் மட்டுமின்றி குடிநீர், வடிகால் முறைகள், நீர் ஆதாரங்கள், நீர் வழிகள், எரிசக்தி, ஊரக உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும் என்று கூறினார்.

மேலும் அமெரிக்கர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க இந்த மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றம் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தது 1.5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு புதிய முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவித்தார்.

total views