சிங்கப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

Report
29Shares

சிங்கப்பூரில் செண்டோசா விடுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தீவிர கண்காணிப்பும் நடைபெற்று வருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12 ஆம் திதி நடைபெறவுள்ள நிலையிலேயே அங்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சந்திப்பு குறித்த ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் வடகொரிய ஜனாதிபதியின் விசேட அதிகாரிகள் அங்கு சென்று ஆராயவுள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலையில், சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் வெளியிட்டுள்ளதாக, சில ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும், இந்த தகவலை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது,

இதற்கிடையில், சந்திப்பு நடைபெறும் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயற்பட்ட இரு தென்கொரிய ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1687 total views