அமெரிக்காவில் பரபரப்பான சம்பவம்

Report
456Shares

அமெரிக்காவில் வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்ததில் இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப் கடந்த மாதம் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ரேட்டில் சினேக் எனப்படும் கிளுகிளுப்பை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்துள்ளது.

அதை பார்த்த அவர் பாம்பின் தலையை வெட்டியுள்ளார்.

அதை அங்கிருந்து அகற்ற வெட்டப்பட்ட பாம்பின் தலையுடன் தூக்கிச் சென்றுள்ளார்.

அப்போது வெட்டிய பாம்பின் தலை அவரை கடித்தது.

கிளுகிளுப்பை பாம்பின் வி‌ஷம் கடுமையானது. அது அவரது உடலில் வேகமாக பரவியது. அதனால் மயக்கம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது அவர் கண் பார்வையை இழந்து விட்டார்.

உயிர் பிழைக்க மாட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

14350 total views