போப் பிரான்சிஸின் பிரார்த்தனை

Report
18Shares

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பினால் உலகில் அமைதி ஏற்பட வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலான பகை நாடுகளாக விளங்கிவரும் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் வகையிலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் சிங்கப்பூரில் நாளை இரண்டு நாட்டு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.

இந்த நிலையில், இந்த சந்திப்பின் ஊடாக உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் நாட்டில் உள்ள வத்திகான் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

1326 total views