அதிக ஏழைகள் வாழும் நாடுகளின் பட்டியல்: நைஜீரியா முன்னேறியது

Report
15Shares

அதிக ஏழைகள் வாழும் நாடு என்ற பட்டியலில் இருந்து நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய பின்தங்கியுள்ளதாக அமெரிக்காவின் புரூகிங்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளாக அதிக ஏழைகள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அந்த இடத்திற்கு நைஜீரியா முன்னேறியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேர்ல்ட் பாவர்டி கிளாக் கணக்கெடுப்பின் படி அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் படி கடந்த திங்கள் அன்று நிலவரப்படி நைஜீரியாவில் 8.70 கோடி பேரும், இந்தியாவில் 7.06 கோடி பேரும் உச்சபட்ச ஏழ்மையில் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் உச்சபட்ச ஏழ்மை நிலைக்கு நிமிடத்துக்கு 6 பேர் தள்ளப்படும் நிலையில், இந்தியாவில் நிமிடத்துக்கு 44 பேர் ஏழ்மையிலிருந்து மீளுவதாக வேர்ல்ட் பாவர்டி கிளாக் கணித்துள்ளது.

942 total views