போமன்வில்லில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு, பலர் இடம்பெயர்வு
போமன்வில்லின் மையப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீயால் பல குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தீவிபத்தில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டர்ஹாம் பொலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தீயணைப்பு படையினர் இரவு 12 மணியளவில் கிங் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள கட்டிடத்திற்குச் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்தக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் வணிகக் கட்டிடங்கள் இருந்த நிலையில், மேலே இரண்டு மாடிகளில் குடியிருப்புகள் இருந்தன.
தீ மூன்றாவது மாடியில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், விரைவில் முழுக்க கட்டுப்பாட்டை மீறியது.
அதிகாரிகள் தற்போது தீ விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணை முடிந்ததும், சுற்றியுள்ள கட்டிடங்களின் பாதுகாப்பு நிலையை மதிப்பீடு செய்து, உரிமையாளர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படும்.
கட்டிடத்தில் தங்கியிருந்த அனைத்து குடியிருப்பாளர்ர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.