பிரம்டனில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி:இருவர் காயம்
பிராம்ப்டனில் மோதல் சம்பவத்தினைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்துடன் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளதாகியுள்ளனர்.
பீல் பிராந்திய பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.. சென்டர் ஸ்ட்ரீட் மற்றும் குயின் ஸ்ட்ரீட் கிழக்கு பகுதியில் அதிகாலை 12:30 மணியளவில் மோதல் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, ஒருவர் உயிரிழந்த நிலையில் இருப்பதையும், இருவர் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
"இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம், பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை," என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அல்லது கண்காணிப்பு காமிரா காட்சிகள் உள்ளவர்கள், பொலிஸாரிடம் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.