கனடாவில் சாலை விபத்தினால் ஏற்பட்ட விபரீதம்
கனடாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் ஒஷாவா பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
64 வயதான நபர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
டர்ஹம் பிராந்தியத்தின் ஹோல்ட் வீதியின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் ஆறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
சாலை விபத்து குறித்து ஒன்றாரியோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளுக்காக குறித்த வீதியை பொலிஸார் மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.