கனடாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி:
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸ் பகுதியில் சனிக்கிழமை காலை நிகழ்ந்த விமான விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை காலை சுமார் 9:20 மணியளவில், அப்பகுதியில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டு வீரர்கள் வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று ஆபத்தில் இருப்பதை கவனித்து, உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தனர்.
இருப்பினும், அந்த விமானம் கனனாஸ்கிஸ் பகுதியிலுள்ள மவுண்ட் மெக்டூகல் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து கனடிய காவல் துறையினர் உடனடியாக மேலதிக விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணையை 'கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்' மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், தற்போது அது தொடர்பான விவரங்களைச் சேகரித்து வருவதாகவும், தகவல்கள் கிடைத்தவுடன் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் பாதுகாப்பு வாரியம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.