கனடாவில் துப்பாக்கிச் சூடு: இளைஞர் பலி
கனடாவின் டொரண்டோ நகரிலுள்ள எடோபிகோக் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, டொரண்டோ காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராத்பர்ன் ரோடு மற்றும் தி ஈஸ்ட் மால் சந்திப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கிடந்த இளைஞரைக் கண்டறிந்தனர்.
கொல்லப்பட்ட நபருக்கு 15 முதல் 20 வயதுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டு, அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்துத் டொரண்டோ காவல்துறையின் கொலை வழக்குப் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும், கருப்பு நிற ஆடை அணிந்த குறைந்தபட்சம் 2 சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
நாங்கள் இந்த விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறோம். எங்கள் அதிகாரிகள் அப்பகுதியில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் தரும் என்பதை நாங்கள் உணர்கிறோம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.