உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் பலி
வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுள்ளனர். அத்துடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, பொதுமக்கள் மீது ரஷ்ய படைகள் கொடூர தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பெசெனீஹி மீதான தாக்குதலுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், மாஸ்கோ உள்ளிட்ட ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை இலக்குவைத்து உக்ரைன் சுமார் 800 ட்ரோன்களை ஏவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் 791 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மாஸ்கோவை நோக்கி மட்டும் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் 180 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்.