கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் மரணம்!
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 29,837 பேர் பாதிக்கப்பட்டதோடு 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தமாக 18இலட்சத்து 17ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 29 ஆயிரத்து 873 பேர் மரணமடைந்துள்ளார்.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 29 ஆயிரத்து 685 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 497 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் 1,884 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 17இலட்சத்து 58ஆயிரத்து 69 பேர் குணமடைந்துள்ளனர்.