கலிபோர்னியாவில் 10 பனிச்சறுக்கு வீரர்கள் மாயம்
அமெரிக்கா - கலிபோர்னியாவின், கெஸ்டல் பீக் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பனிச்சறுக்கு வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த வீரர்கள் தவிர 06 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பனிச்சரிவில் சிக்குண்டவர்களை மீட்பதற்காகவும் காணாமல் போனவர்களை மீட்பதற்காகவும் உள்ளூர் அதிகாரிகளால் 46 மீட்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் கடினமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டில் வானிலை மோசமாக இருப்பதால் எதிர்காலத்தில் பனிப்புயல்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.