10 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனடாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்குச் செல்லும் மக்கள்
10 ஆண்டுகளில் இல்லாத அளவில், கனடாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
சமீப காலமாகவே பல்வேறு காரணங்களுக்காக கனடாவை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதைக் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
Lynne Sladky/AP Photo
அவ்வகையில், 2022இல் மட்டும் 126,340 பேர் கனடாவை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையை ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை, 70 சதவிகிதம் அதிகமாகும்.
CBC
அவர்களில், 53,311 பேர் கனடாவில் பிறந்தவர்கள், 42,595 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவில் வாழ வந்தவர்கள், 30,434 பேர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்கள். தற்போது அவர்கள் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்துள்ளார்கள்.
CBC
கனடாவிலிருந்து வெளியேற பல்வேறு காரணங்கள் உள்ளன. சில விடயங்களில் அமெரிக்கா கனடாவை விட சிறந்ததாக கருதப்பட்டாலும், அங்கும் அதிக செலவு பிடிக்கும் விடயங்கள் உள்ளன.
Submitted by Marco Terminesi
ஆனால், நீங்கள் ஏன் கனடாவை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள் என கேட்டால், பலரும் கூறும் காரணம், எங்களுக்கு ட்ரூடோவின் ஆட்சி பிடிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை என்கிறார் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர மக்களுக்கு உதவிவரும் சட்டத்தரணி ஒருவர்.
Submitted by Monica Abramov