70 ஆண்டுகளின் பின்னர் 102 வயதான கனேடியருக்கு குடியுரிமை வழங்கிய நாடு
102 வயதான கனேடிப் பிரஜை ஒருவருரது குடிரிமை கோரிக்கை 70 ஆண்டுகளின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நெதர்லாந்து பிரஜையான அன்ட்ரே ஹிஸ்ஸிங் என்ற 102 வயதான முன்னாள் போர் வீரர் ஒருவருக்கு இவ்வாறு மீளவும் அந்நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஹிஸ்ஸிங் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 70 ஆண்டுகளின் பின்னர் ஹிஸ்ஸிங்கின் கோரிக்கையை நெதர்லாந்து அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
தாம் நெதர்லாந்து பிரஜையாக மாறியுள்ளதாகவும் இருந்த போதிலும் தாம் ஓர் கனேடியப் பிரஜை எனவும் ஹிஸ்ஸிங் தெரிவித்துள்ளார்.
1919ம் ஆண்டில் பிறந்த ஹிஸ்ஸிங், 1940களில் இரண்டாம் உலகப் போரில் நெதர்லாந்து படையில் இணைந்து கொண்டு போர் புரிந்தார்.
போரின் பின்னர் தொழில் நிமித்தம் பல நாடுகளுக்கு சென்ற ஹிஸ்ஸிங்கின் டச்சுக் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது.
கடந்த 1950ம் ஆண்டு முதல் ஹிஸ்ஸிங் தனது குடிரிமையை பெற்றுக்கொள்ள பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் என்பது கிற்றப்பிடத்தக்கது.
நீண்ட கோரிக்கைகளின் பின்னர் அண்மையில் ஹிஸ்ஸிங்கிற்கு குடியுரிமை வழங்கப்பட்டதுடன் இது தொடர்பில் கனடாவிற்கான நெதர்லாந்து தூதரகத்தில் விசேட நிகழ்வு ஒன்றும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.