கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவர் கைது
கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு சாஸ்காடூனில் இடம்பெற்ற கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் குறித்த நபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகள் பட்டியலில் குறித்த நபர் 10ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்தந பர் கனடாவிற்கு திரும்பும்போது மான்ட்ரியாலில் உள்ள விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொன்ட்ரியாலின் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் 36 வயதான ஜொனாதன் ஓவெலெட்-ஜென்ட்ரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆண்டில் சாஸ்காடூனின் மெல்ரோஸ் அவென்யூவின் 700 பிளாக்கில் இடம்பெற்ற ஒரு கொலை வழக்கில் ஓவெலெட்-ஜென்ட்ரன் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.