அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் - 11வயது மாணவி பாடசாலையில் துப்பாக்கிபிரயோகம்

Vethu
Report this article
அமெரிக்காவின் ஐடகோவில் 11வயது மாணவியொருவர் பாடசாலையில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு சக மாணவர்களும் பாடசாலை ஊழியர்ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
ஆறாம் வகுப்பில் கல்விகற்கும் மாணவியொருவரே இந்த துப்பாக்கிபிரயேகாத்தினை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் மாணவியின் பெயரை வெளியிடமறுத்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் ஆசிரியை ஒருவர் மாணவியிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவரை தடுத்து வைத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணங்கள் இன்னமும் வெளியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவி தனது முதுகுப்பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் என அதிகாரியொருவர்தெரிவித்துள்ளார்.
முதலில் ஒரு பாரிய சத்தத்தையும் அதனைதொடர்ந்து இரண்டு சத்தங்களையும் கேட்டேன் என மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அலறல் சத்தம் கேட்டது எங்கள் ஆசிரியை என்னவென பார்ப்பதற்கு சென்றார் அவர் இரத்தத்தை பார்த்தார் என அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் உளவளஆலோசகர்களின் உடனடி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது