இணையம் வாயிலாக விஷம் விற்ற கனேடியர்... குற்றச்சாட்டுகள் பதிவு
பிரித்தானியர்கள் உட்பட பல பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
சம்பந்தப்பட்ட நபர் கைது
இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த ரசாயனம், ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law (57)என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக The Times பத்திரிகை தெரிவித்தது. தனது தயாரிப்புகளை உலகம் முழுமைக்கும் அனுப்பிவருவதாக அந்த இணையதளத்தில் பெருமையாக விளம்பரமும் செய்திருந்தார் Kenneth Law.
The Times/News Licensing
பலருடைய தற்கொலைக்கு உதவியதாக, மே மாதம் கைது செய்யப்பட்டார் Kenneth Law.
கனேடியரிடம் விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகள்
Kenneth Law, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 1,200 பாக்கெட் விஷம் அனுப்பியுள்ளார். நியூசிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்கள்.
Kenneth Lawக்கு, 117 மரணங்களுடன் தொடர்புள்ளதாக பொலிசார் கருதும் நிலையில், அவரால் உயிரிழந்தவர்களில் 88 பேர் பிரித்தானியர்கள் ஆவர்.
muchloved.com; Devon Mind; submitted
கனடாவைப் பொருத்தவரை, ரொரன்றோவைச் சேர்ந்த Stephen Mitchell Jr (21) மற்றும் ஒன்ராறியோவின் விண்ட்சரைச் சேர்ந்த Ashtyn Prosser (19) ஆகியோரின் மரணத்துடன் தொடர்புடைய வழக்கில் Kenneth Law மீது தற்போது புதிதாக 14 கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், Kenneth Law மீதான குற்றச்சாட்டுகளை வரவேற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |