ஏர் இந்தியா விமானம் குலுங்கியதில் 12 பயணிகள் காயம்!
தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. இதனால் விமானம் சிறிது நேரம் கீழே இறங்கியதுடன், இதன்போது குறைந்தது 12 பயணிகள் இலகுவான காயங்களுக்கு ஆளாகினர்.
பல்வேறு தகவல்களின்படி, இந்த சம்பவத்தின் போது விமானம் சுமார் 300 அடி உயரம் வரை கீழே இறங்கியதாக கூறப்படுகின்றது.

தேசியத் தலைநகரில் தரையிறங்கிய AI2379 விமானத்திலிருந்து அனைத்துப் பயணிகளும் விமானக் குழுவினரும் கீழே இறங்கியதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமான நிலையத்திலுள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஜம்மு-காஷ்மீர் தலைநகரை நெருங்கும்போது, டெல்லி-ஸ்ரீநகர் இண்டிகோ விமானம் ஒன்று கடுமையான ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட கொந்தளிப்பில் சிக்கி, தரையிறங்க முயன்ற போது விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.