கனடாவில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள 12 வயது சிறுவன்
கனடாவின் ரொரன்றோவில் 12 வயது சிறுவன் ஒருவன் தொடர்ச்சியாக 6 பெண்களிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.
தனியாக நடந்து செல்லும் அல்லது சைக்கிளில் செல்லும் பெண்களைத் தொடர்ந்து சென்று அவர்களிடம் ஏதோ பேச முயல்வதுபோல் நெருங்கி, பின் பாலியல் ரீதியாக அவர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் ஒரு 12 வயது சிறுவன்.
சென்ற ஆண்டு, ஜூலை மாதம் 7ஆம் திகதி, ஓட்டப்பயிற்சி செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணை வழிமறித்த சைக்கிளில் சென்ற அந்த சிறுவன், திடீரென அவரை பாலியல் ரீதியில் தாக்கிவிட்டு ஓடியிருக்கிறான்.
toronto.ctvnews
அடுத்த நாள், அதேபாதையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை வழிமறித்த அந்த சிறுவன், தான் ஒரு டிக்டாக் வீடியோவை அவருக்குக் காட்ட விரும்புவதாகக் கூறி, அவர் எதிர்பாராத நேரத்தில் அவரிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறான்.
பின்னர் மீண்டும், ஜூலை 25, ஜூலை 27 திகதிகளிலும் ஒரு 52 வயது பெண்ணும், ஒரு 54 வயது பெண்ணும் அதே சிறுவனால் தாக்கப்பட்டுள்ளார்கள். செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, மீண்டும் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் மோசமாக நடந்துகொண்டுள்ளான் அந்தச் சிறுவன்.
அவனுக்கு 12 வயதே ஆனாலும், வேறு வழியில்லாமல் அவனுடைய புகைப்படத்தை வெளியிட்டு அவனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். இந்நிலையில், திங்கட்கிழமையன்று அந்தச் சிறுவன் சிக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Photo: THE CANADIAN PRESS.
ஆனால், அவன் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனென்றால், முதல் ஐந்து தாக்குதல்களில் அவன் ஈடுபடும்போது, அவனுக்கு 11 வயது மட்டுமே என்பதால், கனேடிய சட்டப்படி அவன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யமுடியாது.
அத்துடன், அந்தச் சிறுவனுக்கு 12 வயது மட்டுமே ஆவதால் அவனுடய பெயர் முதலான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. விரைவில் அவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளான்.