கனடாவில் வீடுகளுக்கு தீ வைத்ததாக 12 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர் மீது குற்றச்சாட்டு
கனடாவில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றின் சந்தேக நபர்களில் 12 வயதான சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒஷோவா பகுதியில் வீடு ஒன்றில் அண்மையில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு பதின்ம வயதினருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களில் ஒரு சிறுமி 12 வயதுடையவர் என்பதை குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்து காரணமாக சில வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் இதனால் சுமார் இரண்டு மில்லியன் டொலலர்கள் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை திட்டமிட்ட அடிப்படையில் இந்த வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.