கனடாவில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 13 வயது சிறுவன் கைது
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 13 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மார்க்கம் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வீடுடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெனிசன் தெரு மற்றும் மிடில்ஃபீல்ட் சாலை பகுதிகளில் உள்ள வீடுகளில் உட்புகுதல் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வீட்டிற்குள் புகுந்து வாகனக் சாவிகளை திருடியுள்ளனர். பின்னர் கொள்ளையர்கள் அந்த வீட்டின் இரண்டு வாகனங்களை திருடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாட்கள் கழித்து, போண்டா சாலை மற்றும் கோல்டன் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து மேலும் இரண்டு வாகனங்களை திருடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடுகளுக்குள் புகுந்து வாகன சாவிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சிறுவனுடன் கொள்ளையுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.