13 வயது சிறுவனின் உயிரை பறித்த விளையாட்டு
அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த ஜேக்கப் ஸ்டீவன்ஸ் என்ற 13 வயதுடைய சிறுவன் விளையாடிய விளையாட்டு வினையாக முடிந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
டிக்-டாக்கில் 'பெனாட்ரில் சேலஞ்சை' செய்து முடிக்க முயன்றபோது சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
சவாலை முடிக்க அவர் ஒரே நேரத்தில் 12 முதல் 14 பெனாட்ரில் மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். அந்தச் சிறுவன் சவாலை ஏற்று மாத்திரயை சாப்பிட்டு கொண்டிருந்தபோது அவனது தோழர்கள் அருகில் நின்று வீடியோ எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் மாத்திரைகளை சாப்பிட்டவுடன் உடனடியாக கீழே விழுந்துள்ளான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் ஒருவாரம் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உயர்மட்ட அரசு நிறுவனமான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பல ஆண்டுகளாக டிக்-டாக்கில் இயங்கும் 'பெனாட்ரில் சவால்' குறித்து கவலைகளை எழுப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக்கில் தொடங்கப்பட்ட 'பெனாட்ரில் சவால்' ஆபத்தான அளவு ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்தான டிஃபென்ஹைட்ரமைன் (DHP) ஓரே நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சவால் வைக்கிறது.
மேலும் Benadry மற்றும் பிற OTC மருந்துகள் போன்ற தயாரிப்புகளில் இந்த சவால் விடப்படுகிறது. பெனாட்ரில் எளிதில் கிடைப்பதால் இந்த விளையாட்டு என்னும் சவால் சாத்தியமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.