கனடாவில் பாடசாலை ஒன்றுக்கு மிரட்டல் விடுத்த 14 வயது சிறுவன் கைது
கனடாவின் ஓஷாவா நகரில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றுக்கு விடுக்கப்பட்ட துப்பாக்கி சூடு மிரட்டல் அழைப்புதொடர்பில் 14 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பு விளையாட்டாக மேற்கொள்ளப்பட்டது எனப்து விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஹார்மனி ஹைட்ஸ் பொதுப் பாடசாலைக்கு மிரட்டல் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணகைளில் வளாகத்தில் எவ்வித பாதுகாப்பு அச்சமும் இல்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயது சிறுவன் மீது குற்றவியல் தொந்தரவு, சொத்து சேதம், மற்றும் பிறரின் உயிர் பாதுகாப்பை ஆபத்துக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“இவ்வாறான சம்பவங்கள் கேலிக்குரியவை அல்ல. அவை மக்களிடையே பயத்தை ஏற்படுத்துகின்றன; மேலும் உண்மையான அவசர நிலைகளில் செலுத்த வேண்டிய கவனத்தை திசைதிருப்புகின்றன,” என பொலிஸ் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.