பிரித்தானியாவில் 12 வயது சிறுவனை கொலை செய்த 14 வயது சிறுவன்
பிரித்தானியாவின் பர்மிங்கஹாமில் நேற்று மதியம் 12 வயது சிறுவன் கத்திக்குத்து தாக்குதலுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 12 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொலை செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹால் கிரீனில்(Hall Green) உள்ள ஸ்க்ரைபர்ஸ் லேன்(Scribers Lane) அருகே நேற்று மாலை 3:00 மணிக்கு சற்று பிறகு 12 வயது சிறுவன் ஒருவர் படுகாயங்களுடன் கண்டறியப்பட்டான்.
தகவல் தெரிவிப்பதற்காக ஒரு தனிப்படை
அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் முன் வந்து தகவல் தெரிவிக்குமாறு வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தகவல் தெரிவிப்பதற்காக ஒரு தனிப்படை பொது மக்கள் தகவல் இணையதளம் (Major Incident Public Portal - MIPP) அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள புகைப்படங்கள் அல்லது வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், இந்த இணையதளத்தை mipp.police.uk என்ற முகவரியில் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.