இஸ்ரேல் தாக்குதலில் 146 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காஸா பகுதியில் இஸ்ரேலிய வான் வழி தாக்குதலில் குறைந்தது 146 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மிகவும் கடுமையானவை என கூறப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , இரண்டு நாள்களுக்கு முன்னர் தமது மத்திய கிழக்கு பயணத்தை நிறைவேற்றியதை அடுத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் மேலும் 58 பேர் கொல்லபட்டதாகவும் மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கிடையே புதையுண்டு கிடப்பதாகவும் வடக்கு காஸாவிலுள்ள இந்தோனீசிய மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இஸ்ரேலிய வான் வழி தாக்குதல்களில் 459 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.