ஸ்காப்ரோ துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பரிதாப மரணம்
ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 17 வயதான சிறுவன பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
ஸ்கார்ப்ரோவின் எக்லின்டன் வீதி மற்றும் மிட்லாண்ட் அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சிறுவன் மீது பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்திருந்த சிறுவனை போலீசார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனினும் சிகிச்சைகள் பலனின்றி குறித்த சிறுவன் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான்.
இந்த துப்பாக்கி சூட்டை யார் மேற்கொண்டார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கட்டிடத்திற்கு உள்ளேயா அல்லது வாகன தரப்பினத்தில இடம்பெற்றது என்பதும் இன்னும் தெளிவாகவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அருகாமையில் இருந்த பாடசாலையின் நடவடிக்கைகளை சற்றே இடைநிறுத்த போலீசார நடவடிக்கை எடுத்திருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
நகரின் பிரபல சிறுவர் பாதுகாப்பு மையம் ஒன்றிற்கு மிக அருகாமையிலே இந்த சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவிக்கின்றனர்.