17 வயது சிறுவன் மீது கத்திக்குத்து —இளம் பெண் கைது!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் பேருந்து ஒன்றுக்குள்ளேயே 17 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகத் தாக்க முயன்ற குற்றத்திற்காக 18 வயது இளம் பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 1:50 மணியளவில் ஹூரோன்டாரியோ தெரு மற்றும் வாட்லைன் டிரைவ் அருகே இயங்கிக் கொண்டிருந்த 'மிவே' பேருந்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பீல் பிராந்திய காவல் துறை அதிகாரிகள் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுவனும், கத்தியால் குத்திய 18 வயது இளம் பெண்ணும் முன்பே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண் சிறுவனைக் கத்தியால் குத்தியுள்ளார்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அச்சிறுவன் டொராண்டோவில் உள்ள அதி தீவிர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார்.
தொடக்கத்தில் அவரது நிலை சீராக இருந்தபோதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திலேயே 18 வயது பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது இருவருக்குள் தனிப்பட்ட முறையில் நடந்த சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு வேறு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை என்றும் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான உறவின் தன்மை என்ன என்பது குறித்தும், அவர்கள் இருவரும் ஒன்றாகப் பேருந்தில் ஏறினார்களா என்பது குறித்தும் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.