பிரான்ஸில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் 170 விமானங்கள் ரத்து
பிரான்ஸில் விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் விமானச் சேவைகளை 40 சதவீதம் வரை குறைக்குமாறு பிரான்ஸ் விமான போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் ஏர் 170 விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ரியான் ஏர் விமான போக்குவரத்து நிறுத்தத்தால் , இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30,000ற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.