மொன்ரியலில் 18 வயது இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு
கனடாவின் மொன்றியலில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
வெலி மெரி Ville-Marie பகுதியில் உள்ள ஸெர்புருக் Sherbrooke தெருவும் டெய்பிர்வில் d’Iberville தெருவும் சந்திக்கும் இடத்தில்இந்த தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் இளைஞரை அணுகி கொள்ளை அடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த குண்டு இளைஞரின் கீழ்க் கால்பகுதியில் பாய்ந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே சந்தேக நபர் தப்பியோடினார். இதுவரை அவரை அடையாளம் காண முடியவில்லை.
காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உயிருக்கு ஆபத்தில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.