பிரான்ஸில் கடும் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில் ,பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 2,025 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஐரோப்பா முழுவதும் உக்கிரமடைந்துள்ள கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒரே மாதத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்தந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.