இந்தியருக்கு சொந்தமான உணவகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்
Two arrested over firing at Kapil Sharma’s Canada cafe: கனடாவில், கபில் ஷர்மாவுக்கு சொந்தமான உணவகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல இந்திய நகைச்சுவையாளரும் நடிகருமான கபில் ஷர்மாவுக்கு சொந்தமான உணவகம் ஒன்று, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் அமைந்துள்ளது.
அந்த உணவகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கபில் ஷர்மா, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம், Kap’s Cafe என்னும் உணவகத்தைத் திறந்தார்.
உணவகம் திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி, சிலர் அந்த உணவகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பின்னர், ஆகத்து மாதம் 7ஆம் திகதியும், அக்டோபர் மாதம் 16ஆம் திகதியும் அந்த உணவகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
உணவகத்தின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கி கட்டிடம் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டாலும், அதிர்ஷ்டவசமாக அந்த தாக்குதல்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில், அந்த துப்பாக்கிச்சூடு தொடர்பில், சர்ரேயில் இரண்டுபேரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.
பிரதீப் சிங் (22) மற்றும் சவீர் கான் (22) என்னும் அந்த இருவரையும் கைது செய்துள்ள பொலிசார், அவர்களை காவலில் அடைத்துள்ளனர்.