ஸ்பெய்ன் ரயில் விபத்தில் 2 கனடியர்களுக்கு காயம்
ஸ்பெயினில் இன்று இடம்பெற்ற நடைபெற்ற கொடூரமான அதிவேக ரயில் விபத்தில் குறைந்தது இரண்டு கனடியர்கள் காயமடைந்துள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கனடாவின் ஆதரவைத் தெரிவித்த மார்க் கார்னி, ஒட்டாவா அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து செவில் நோக்கி ஒரே பாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

'ஐரியோ' என்ற தனியார் நிறுவனத்தின் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தபோது, பின்னால் வந்த அரசுக்குச் சொந்தமான 'ரென்ஃபே' நிறுவனத்தின் ரயில் அதன் பின்புறத்தில் அதிவேகமாக மோதியது. இந்த மோதலில் ரயிலின் பெட்டிகள் பலத்த சேதமடைந்து தூக்கி வீசப்பட்டன.
இதில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளனர். கஸ்டிலா லா மஞ்சா பிராந்திய அரசு உறுதிப்படுத்திய தகவலின்படி, மேலும் 58 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டொலேடோ மாகாணத்தில் உள்ள உர்தா பகுதிக்கு அருகில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் இருப்பவர்களையும் உடல்களையும் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.