கனடா யார்க்வில் பகுதியில் துப்பாக்கிச் சூடு: இரு வர்த்தகக் கட்டடங்கள் சேதம்
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள யார்க்வில் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு வர்த்தகக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
அவென்யூ மற்றும் டேவன்போர்ட் வீதிச் சந்திப்புகளுக்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததுடன், அருகிலிருந்த இரண்டு வணிகக் கட்டடங்கள் துப்பாக்கிச் சூட்டினால் சேதமடைந்திருப்பதையும் உறுதிப்படுத்தினர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவர் குறித்தும் பொலிஸார் இதுவரை எந்த விபரங்களையும் வெளியிடவில்லை. எவ்வாறாயினும், இச்சம்பவம் குறித்த விசாரணைகளை டோரன்டோ பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.