வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விளையாட்டு வீரர்: இருவர் பலியான பரிதாபம்

Canada
By Balamanuvelan Jul 21, 2026 08:23 AM GMT
Report

கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை 11இல், சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில், தவறான திசையில் சென்ற ஒரு கார், எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது. 

வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விளையாட்டு வீரர்: இருவர் பலியான பரிதாபம் | 2 Dies In Candian Footballer Drives Car Accident

அந்த கோர விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகளும் பலியானார்கள்.

அவர்களில், தவறான திசையில் காரை செலுத்தியவர் ஒரு கனேடியர். அவரது பெயர் ஜேடன் (Jayden Dalke, 30). ஜேடன், பிரபல கால்பந்து அணியான Saskatchewan Roughriders அணி வீரர்.

விடயம் என்னவென்றால், ஜேடனின் காரில் கஞ்சாவும், மதுபானமும் இருந்துள்ளன. அவர் பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமலே அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் போதையிலிருந்தாரா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். 

வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விளையாட்டு வீரர்: இருவர் பலியான பரிதாபம் | 2 Dies In Candian Footballer Drives Car Accident

ஜேடனின் கார் மோதி உயிரிழந்தவர், பீஷ்மா ராஜ்யகுரு (22) என்னும் இந்தியர். பொலிசார் ராஜ்யகுருவைக் குறித்து தெரிவித்த தகவல் அவ்வளவே!

இதற்கிடையில், இந்தியாவிலிருக்கும் ராஜ்யகுருவின் பெற்றோர், தங்கள் மகனுடைய மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது நண்பர்கள், எப்படியாவது பணம் திரட்டி அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

ராஜ்யகுருவின் பெற்றோருக்கு தங்கள் மகனை அணைத்துக்கொள்ளும் ஒரு இறுதி வாய்ப்பையும், அவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பையும் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுவது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US